Friday, October 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாய்ப்பாலின் நன்மைகள்

தாய்ப்பால் பிறந்த குழந்தைக்கு ஒரு முழுமையான ஊட்ட உணவு.

நோயுற்ற குழந்தைக்கு தாய்ப்பா லும், தாயின் அரவணை ப்பும் இத மளிக்கின்றன. குழந்தையின் மன வளர்ச்சிக்கு அது உதவுகிறது.

தாய்ப்பாலூட்டுவது தாய்க்கும் ப ல நண்மைகளை அளிக்கும். குழந் தை பிறந்த அரை மணி நேரத்திற் குள் தாய்ப்பாலூட்ட ஆரம்பிப்பதால், கருப்பை விரைவில் சுருங்கி உதிரப் போக்கு குறையும். அதனால், தாயின் இர த்தம் வீணாகாமல், சோகை ஏற்படாமல் தடுக்கப்படும். தாய் ப்பாலூட்டும் தாய் தேவையற்ற தன் உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய வடிவைப் பெற முடியும். முதல் 4-6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளிக்கும் தாய்மார்கள் உடனே கர்பம் ஆவதில்லை. இத்தகைய தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரு வதும் குறைவு.

புட்டிப்பால்

அலுவலகப் பணியை மு ன்னிட்டு வெளியில் போ கிற தாயும், தன் குழந் தைக்குப் போதிய பாலை சுரக்க முடியாத தாயும் குழந்தைகளுக்காக சிபா ரிசு செய்யப்படும் பவுட ரை, வெந்நீரில் கரைத்து புட்டியில் அடைத்துக் கொடுக்கலாம். தயாரிப் பாளர் குறித்திருக்கும் அளவில் கரைத்து பாலைத் தயாராக்க வேண்டும்.

தாய்ப்பால் போதவில்லை. (குழந்தை பிறந்த நான்கைந்து மாதங்களில்) என்கிற நிலை வரும்போது பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்க லாம். பாலுடன் ஒரு மட ங்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வை த்து ஆறவிட வேண்டு ம். மேலே படர்ந்து இருக்கும் பாலாடையை நீக்கி விட் டு, புட்டியில் பாலை ஊற் றிக் கொடுக்கலாம்.

பாட்டிலில் பால் புகட்டும்போது கவனிக்க வேண்டியவை –

பால் புகட்டும் புட்டி, மூடி, ரப்பர் ஆகியவற்றை ஒரு நாளை க்கு மூன்று, நான்கு முறை யாவது தண்ணீரில் போட்டு கொ திக்க வைத்து சுத்தம் செய்ய வேண்டும். ரப்பரில் போடப்படும் துளை (ஓட் டை) சிறியதாக இருந்தால் குழந்தை பால் உறிஞ்சிக் குடிக்க சிரமப்பட்டு விரை விலேயே களைத்து விடும். அதே சமயம் ஓட்டை பெரி தாக இருப்பின் குழந்தைக்கு புரையேற வாய்ப்பு உண்டு. என வே, ரப்பரில் இடப்படும் துளை சரியான அளவில் இருப்பது அவசியம்.

சில குழந்தைகள் கால வரைய றைக்கு முன்னதாகப் (Premature) பிறந்துவிட்டிருக்கும். அத்தகைய குழந்தைகள் பல வீனமாக இருப் பதால் தாயின் மார்பகத்தில் இரு ந்து பாலை உறிஞ்ச இயலாது. சில நேரங்களில் தாயின் நோய்க் கார ணங்கள் தாய்ப்பாலை பரிந்து ரைக் வொட்டாமல் செய்து விடும். அந்நிலையில் புட்டிப்பால் தான் கைகொடுக்கும்.

தாய்ப்பாலுக்கு நிகரானது பசுவின் பால். எருமை அல்லது ஜெர்ஸி பசுவின் பாலில் வெண்ணெய்ச் சத்து அதிகம் இருக்கும். அந்தப் பால் குழந்தையின் வயிற்றை கனக்கச் செய்து விடும்.

முன்கூட்டியே பிறந்த குழந்தைகளுக்கும், பலவீனமான குழந்தைகளுக்கும் ஏடு நீக்கிய பாலைத்தான் தரவேண்டும்.

குழந்தைக்குப் பால் கொடுப்பது பற்றிய திட்டம் எல்லாக் குழந்தைக்கும் ஒரே மாதிரியாக இரு க்க முடியாது. அது குழந் தையின் அளவு, எடை, விழிப்பு, ஆர்வம் இவ ற்றைப் பொறுத் தது. சாதாரணமாக நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை (விடியற்காலை இரண்டு மணி மு தல் இரவு பத்து மணி வரை) பால் கொடுக்கலாம்.

பால் கொடுக்கிற புட்டி, ரப்பர், மூ டி ஆகியவற்றை கொதித்த நீரில் கழுவி, நன்றாக உலர வைக்க வேண்டும்.

குழந்தைக்கு நான்கு, ஐந்து மாத ங்கள் முடிந்தவுடன் பாலில் உள்ள சத்துக்கள் போதுமானதாக இருக்காது. அப்போது குழந்தை களுக்கென்றே தயாரிக்கப்படுகிற ஃபாரெக்ஸ், ஸெரிலாக், நெஸ்டம் போன்றதை தேர்ந்தெ டுத்துக் கொடுக்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: