Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“சீர்காழி” திருவாளர் சிவசிதம்பரம் அவர்களுடன் சிறப்பு நேர்காணல்

க‌டந்த 09/10/2011 அன்று உங்கள் விதை2விருட்சம் இணையம் சார்பாகவும், உரத்த‍ சிந்தனை மாத இதழின் சார்பாகவும், சென் னை சாந்தோமில் உள்ள‍ சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர் களை அவரது இல்ல‍த்திலேயே சந்தித்து, எடுக்க‍ப்பட்ட‍ நேர்காணல்

விதை2விருட்சம் கேள்வி – 1

குறிப்பிட்ட‍ சில ராகங்கள் மட்டுமே பிரபல இசையமைப் பாளர்களால் திரைப் படங்களில் பயன் படுத்த‍ப்பட்டு வருகிறது. உதாரணமாக சங்கரா பரணம், மோகனம், பீம்ப்ளாஸ் இந்தோளம் போன்ற ராகங்களை குறிப்பிடலாம். அது ஏன்?

சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர்கள்

இந்த கேளவிக்கு தகுந்த பதிலை சொல்லக்கூடியவர்கள் பிரபல இசையமைப்பாளர்கள்தான். பாடகன் என்ற முறையில் நான் எது வும் அதிக பிரசிங்கி தனமா எதுவும் சொல்லிவிடக் கூடாது.

இசையமைப்பாளர்கள் ஒரு பாடலுக்கு இசைய மைக்கும்போது அதன் சாகித்யத்தை பார்த்து வார்த்தைகளை பார்த்தும் ராகத்தை அவர்கள், சந்தோஷமான அல்லுது துக்க‍மான‌ ராகத்தையும் மெட்டமைக்க முடியும். துயரத்திற்கே உரித்தான ராகங்களையும் சந்தோஷத்தி ற்குரிய ராகங்களாகவும் அமைக்க‍ முடியும். ஒரு சபை நிறைய மக் க‍ள் அமர்ந்திருப்பார்கள் சிலருக்கு சில ராகங்கள் மிகவும் பிடித்திரு க்கும் அதனையே மீண்டும் மீண் டும் போட சொல்வார்கள். சங்கரா பரணம், மோகனம், பீம்ப்ளாஸ், இந்தோளம் ஆகிய ராகங்ளில் பாடும்போது பிரபலமாக பரிச்சய மாக காலக் கட்ட‍த்தில் பாடப்படும் ராகங்கள் ஆகும்.

எல்லா விதங்களிலும் எல்லா மேடைகளிலும் பாடப்படுகின்ற நாட க மேடை ஆகட்டும். மரபிசை மேடைகளில் ஆகட்டும் கர்நாட க சங்கீத கச்சேரிகளாகட்டும் இதில் அந்த ராகத்தை பாடி எக்ஸ்க் லூசிவான நேரத்தில் அதில் உள்ள‍ ஜனரஞ்சகமான விஷயத்தில் கையாள்வதற்கு இந்த கேளவி ஞானம் அவர்களுககு அந்த ராக த்தை அனுபவித்த‍ பலனாக அதை கையாள்வது என்பது சுலபமாக உள்ள‍து. அப்ப‍டி வரும்பொழுது சங்கராபரணம், பீம்ப்ளாஸ் மோ கனம் இந்தோளம் இது போன்ற ராகங்கள் வழக்க‍ த்தில் ராகங்கள் கேட்பதற்கு எளிமையாகவும் கலைஞர்களும் இதை எளிமையா கவும் ஏற்று கொள்கிறார்கள். அப்ப‍டி எண்ணும் பொழுது நமது மை ண்ட் வந்து அந்த ராகத்திற்கு போவது என்பது இயல்பு.

இசையமைப்பாளர்கள் வந்து பாடச்சொல்லி கொடுப்ப‍த்கு தகுந் தாற்போல் நாங்கள் பாடவேண்டும். .

அடிப்படையில் பல விஷயங்கள் உண்டு. பீம்ப்ளாஸ் அடிப்படை யில் ஆபேரி, அதிர்ஷட ஆபேரி என்று ஒரு பெயர் உண்டு. ஆபேரி அந்த காலத்தில் எந்த பாட்டு போட்டாலும் பாப்புலர் ஆனது அதனால் ஒரு தயாரிப்பாளர் வந்து இன்னிக்கு ஒரு குத்துப் பாட்டு ஹிட்டான உடன் அடுத்து வரும் குத்து ப்பாட்டு எல்லாம் அந்த மாதிரியே வரும்.

சில பாடல்கள் அந்த பாட்டு மாதிரி போட்டு கொடுங்க என்று வேண் டுகோள்கள், தெரிவிப்புகள், அன்புத்தொல்லைகள் செய்யும்போது சில ராகங்கள் இதனாலேயே புதிய ராகங்கள் பக்க‍ம் போகாமல் இதி ல் உள்ள‍ ராகங்களிலேயே பண்ணுவேம் என செய்வதும் உண்டு. ஆனால் அடிப்படையில் மக்க‍ள் மனதில் பரிச்சயப்பட்ட‍ ராகங்கள் என்று பழக்க‍மான ராகங்கள் சில இருக்கிறது. வெகு ஜனத்தால் ஆதரிக்க‍ப்ப‍ட்ட‍ ஆதரவு தரப்ப‍ட்ட‍ பாடல்கள் அந்த ராகத்தில் அமை ந்திருக்கிறது. அந்த பார்முலா ராகங்ளை வந்து அவர்கள் கையா ளும் பொழுது அவர்கள் சாகித்தியத்தை பார்த்த‍வர்கள் அந்த காட்சி சூழலுக்கு ஏற்பவாறு அவர்களின் உண ர்வுகளுக்கு வருகிற தோ அதை அந்த ராகத்திலும் போட்டு கலவையாக தரு கிறார்கள். நாங் கள் அதை ஈஸியாக பாடிவிட்டு பேர் வா ங்கி போய்விடுகி றோம்.

கற்றுக்கொடுக்கும் இசையமைப்பாளர் குரு நாதருக்கு சமம்

இப்ப‍ புதுபுது இசையமைப்பாளர்கள் தம்பிகள் எல்லாம் இசை அமைக்கிறார்கள். அவர்கள் முறையே இசை பயிற்சியில் கீ போர் டு கத்துக்கிடித்து இருப்பார்கள். இசையமைப்பாளர்களை குருவாக மதிக்கவேண்டும் என்ற பண்பை எனது தகப்பனார் எனக்கு சொல் லிக்கொடுத்த‍ பண்பு ஆகும்.

விதை2விருட்சம் கேள்வி – 2

இசையமைப்பாளர் தான் இசையமைக்கும் ராகங்களில் சில அந்நிய ஸ்வரங்க ளை சேர்க்கிறார்க ளே இது சரிதானா?

உதாரணமாக மோகனம் ராகம் என்பது ஒரு சந் தோஷமான ராகம் (ஸ, ரி2, க2, ப, த2 ஸ், ஸ், த2, ப, க2, ரி2, ஸ) இதில் வரும் க2 என்ற ஸ்ரத்தை சற்று மாற்றி க1 என சேர்த்தால், அது சிவரஞ்சனி ராகமா கிவிடும். சிவரஞ்சனி என்பது துக்க‍த்தை பிரதி பலிக்ககூடிய ராக மாகும். இதுபோன்று கலப்ப‍தால், மோகனத்தின் ராகத்தின் இனி மை இழந்து விடும் அல்லவா.

சீர்காழி திருவாளர் சிவசிதம்பரம் அவர்கள்

ம‌ரபு இசைக்கு இந்த அந்நிய ஸ்வரங்கள் சேர்ப்ப‍து என்பது தவ றுதான். சிரை இசை என்று வரும்பொழுது பெரிதும் உணர்வு மேலி ட முக்கியத்துவம் அளிக்க‍ப்படுகிறது. இந்த ராகம், இந்த தாளம், இத்த‍னை ஆவர்த்த‍னம் அப்ப‍டி என்கின்ற சமாச்சாரங்கள் எல்லாம் அந்த இலக்க‍ணங்கள் எல்லாம் சினிமா இசை வந்து நாம் புரட்சி பண்ணுவதாக கருதாதீர்கள். திரை இசையில் உள்ள‍ ஸ்வர சுத்த‍ம், சுருதி சுத்த‍ம் நாவசைப்பு, லய சுத்த‍ம், சாகித்தியம், இத்த‍னை விஷயங்களையும் அணுசரித்து ஒரு சினிமா பாடல் தயாராகிறது.

அங்கெல்லாம் சுத்த‍மாக இருக்கிறது. ஆன டியூன் போடும்பொழுது அந்நிய ஸ்வரங்கள் கலப்பு என்பது ஒரு சுகத்திற்காக அந்த ஒரு குறிப்பிட்ட‍ கேரக்டருடைய ஃபீலுக்கு அந்த வார்த்தை போடும் போது அந்த ஒரு சின ஸ்வரம் போடும்பொழுது ஒரு சுகமோ சோக மோ அல்ல‍து சின்ன‍ ஒரு மாற்ற‍மோ அந்த டியூனில் வரும் பொழுது அந்த விஷயம் அதனால் சினிமாவிற்கு இந்த அந்நிய ஸ்வரங்களை சேர்ப்ப‍து சரிதான்.

உதாரணமாக ஆபேரி எடுத்துக்கொள்வோம். இசைப் பெரியவர்களி டம், மரபு கற்றுத் தேர்ந்தவர்களிடம் கேட்டீங்கண்ணா இது ஆபே ரியே இல்லை என்பார்கள் கர்நாடக தேவகாந்தாரியை ஆபேரி என்பு பாடிக்கிட்டு இருக்கிறார்கள்.(பாடிக்காட்டுகிறார்) அந்த தைவதம் வந்தால்தான் ஆபேரி. ஆனால் நாம்பாடிக்கிட்டு இருக்கி றது நகுமோ மரமு இசை கலைஞர்கள் அந்த நகுமோ வந்து கர் நாடக தேவகாந்தாரி அமைப்பில் தான் பாடிக்கிட்டு இருக்கிறா ர்கள். இந்த மாதிரி கர்நாடக சங்கீதத்திலும் உண்டு. அதில் ஒரு சின்ன‍ ஸ்வர மாறுதல் என்பது திரைப்பட பாடல் வந்து நடக்கிறது. அது வந்து ராக சாயலிலும் மாத்தி பிரதிவேதம் பண்ணி ஸ்ருதி பேதங்கள் பண்ணி அவர்கள் மெட்ட‍மைத்திறது. அவர்களுடைய இன்னோவேஷன். சினிமா என்பது இசையில் புதிய பரிமாணம்.

அதனால்தான் டக்கென சுத்த‍மான நான் சொன்ன‍ லய பாவ ராக தாள சாகித்திய சுத்த‍ம் இருந்து அந்த ஹீரோ உச்ச‍ரிக்க‍வேண்டும் என்றால் இவர்கள் உச்ச‍ரிக்க‍ வேண்டும் இப்ப‍டி விஷயங்கள் எல் லாம் பன்றதனால இந்த பாடல்கள் வந்து ஒரு சின்ன‍ மாற்ற‍ங்கள் பண்ணி ஸ்வரமாற்ற‍ங்கள பண்ணி ஒரு ராக லைட்டா கலர் பண்ணி மெட்டோட அந்த பாடல்களை வரும். மக்க‍ள் ஏகோபித்த ஆதரவை மக்க‍ள் உடனடியாக அவர்களது மனதில் பதிகிறது. மக் க‍ள் வரவேற்க்கிறார்கள்.

தொடரும்

இந்த நேர்காணல் உங்கள் நண்பன் விதை2விருட்சம்,ராசகவி ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான் மற்றும் உரத்த‍ சிந்தனை மாத இதழைச் சார்ந்த திருமதி பத்மினி பட்டாபிராம் மற்றும் ஓவியர் மணி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: