முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது கண்களை தானம் செய்துள்ளார். 50 கே.ஜி. தாஜ்மஹால் என்ற வர்ணனைக்கு சொந்தக்காரரான ஐஸ்வர்யா ராய் இளமை துள்ளலுடன் பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அவர் சமீப காலமாக இந்திய கண் வங்கி அமைப்புடன் சேர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார் ஐஸ்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், மக்கள் என்னைப்பற்றி நிறைய தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அதற்கு காரணமாய் இருப்பது எனது கண்கள். எனவேதான் இந்த கண்ணை தானம் செய்ய முடிவு செய்துள்ளேன். மக்களுக்கு இதன் மூலம் கண்தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறேன், என்று கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா ராய், கண் தானம்,