Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அணு உலை விபத்து இழப்பீடு மசோதா

அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவில் எதிர்கட்சிகள் கூறிய திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், அம்மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் அலுவலக துறை அமைச்சர் பிரித்விராஜ் சவாண், மக்களவையில் இன்று இம்மசோதாவை தாக்கல் செய்தார். பிரதமர் அலுவலக துறை அமைச்சர் பிரித்விராஜ் சவாண், மக்களவையில் இன்று இம்மசோதாவை தாக்கல் செய்தார். முன்னதாக அணு உலை விபத்து இழப்பீடு மசோதாவுக்கு முதலில் ஆதரவு தெரிவித்த பா.ஜனதா, அம்மசோதாவில் இடம்பெற்றுள்ள 17 ஆவது பிரிவு திருத்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்தது.

இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள விதிகளின்படி, விபத்தை ஏற்படுத்தும் எண்ணத்தில் அணு பொருட்களை சப்ளை செய்பவர்கள் அல்லது அதன் ஊழியர்கள் நடந்துகொண்டு, அதனால் அணு உலையில் கசிவோ அல்லது விபத்தோ ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு தொகை கோர முடியும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்ச்சையை கிளப்பிய இந்த சட்ட திருத்தத்தை நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு மீண்டும் அனுப்ப வேண்டும் என்றும்,அணு உலைகளில் விபத்து நேரிடும் நிலையில் உலைகளை வடிவமைத்த நிறுவனத்தையும், உபகரணங்களை சப்ளை செய்த நிறுவனத்தையும் பொறுப்பாக்கும் வகையில் அணு விபத்து இழப்பீடு மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் பா.ஜனதா வலியுறுத்தியது.

இடதுசாரிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.இதனால் இம்மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனையடுத்து மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பா.ஜனதா தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார் அமைச்சர் பிரித்விராஜ் சவாண்.அப்போது பா.ஜ.வின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதுபோல் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி. ராஜா ஆகியோரையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.அவர்களிடமும் அதே வாக்குறுதியை அளித்தார்.

இதனையடுத்தே எதிர்கட்சிகள் தெரிவித்த திருத்தத்தை மசோதாவில் இடம்பெறச் செய்ய மத்திய அரசு முடிவு செய்ததாக தெரிகிறது. இருப்பினும் அரசு இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அம்மசோதாவை நிறைவேற்ற ஆதரவளிப்போம் என பா.ஜனதா அறிவித்துள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: