Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரூ.2 ‌கோடி சம்பளம் கேட்கிறாகும் இசையமைப்பாளர்

புதிய ‌படமொன்றிற்கு இசையமைக்க ரூ.2 ‌கோடி சம்பளம் கேட்கிறாராம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். சினிமா உலகில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குபவர்களில் இசையமைப்பாளர்களுக்கும் முக்கிய இடமுண்டு. புதுப்புது இசையப்பாளர்கள் கலையுலகி்ல நுழைந்து ஒரு லட்சம் , இரண்டு லட்சம் ரூபாய்க்கு இசையமைக்க தயாராக இருந்தாலும்… முன்னணி டைரக்டர், தயாரிப்பாளர்கள் பலரும் முன்னணி இசையப்பாளர்களையே நாடுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் சம்பளம் ரூ.3 கோடியை தாண்டி விட்டது. அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க தயாராக இருந்தாலும், ரஹ்மானின் கால்ஷீட் கிடைக்காத சூழ்நிலையே இப்போது நிலவுகிறது.

அவரைப்போலவே இசையப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூம் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறார். இந்தியில் சக்கைபோடு போட்ட த்ரீ இடியட்ஸின் தமிழ் ரீ-மேக்கிற்கு இசையக்கும்படி ஹாரிஸிடம் கேட்டிருக்கிறார்கள். 2 கோடி சம்பளம் கொடுத்தால் இசையமைக்கிறேன். இல்லையென்றால் வேறு ஆளை பாருங்கள், என் கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டாராம் ஹாரிஸ்.  கடைசியில் அக்ரிமென்ட் போட நல்ல நாளு போவுதே என்று சம்மதித்து அட்வான்சும் கொடுத்துவிட்டதாக கிசுகிசுக்கிறது

Leave a Reply