Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அந்த வரிசையில் நடிகை சதாவும்

கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்காக அமிர்தாஞ்‌சன் நிறுவனம் மாதந்தோறும் ரூ.1 லட்சம் வழங்கி வருகிறது. இதற்கான நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட நடிகை சதா, தானும் ஒரு பிராணிகள் பிரியர்தான் என்று ‌தெரிவித்ததோடு, செல்லப்பிராணிகள் வளர்ப்பிலும், ஆதரவற்று திரியும் விலங்குகள் பராமரிப்பிலும் அனைவரும் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே நடிகை த்ரிஷா செல்லப்பிராணிகளாக இந்திய விலங்குகளை வளர்க்க வேண்டும் என்ற இயக்கத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். நடிகர் மாதவன் உள்ளிட்ட சிலபல நட்சத்திரங்கள் விலங்குகளை கொன்று அதன் தோலில் உருவாக்கப்படும் பொருட்களை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை சதாவும் பீப்பிள்ஸ் பார் அனிமல்ஸ் என்ற இயக்கத்தின் மூலம் தனது பிராணிகள் சேவையை தொடர உள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: