காதல் கிசு கிசு, மஞ்சள் வெயில் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பாலா. இவருக்கு ஆகஸ்ட் 27ம் தேதியன்று திருவான்மியூர் மருதீஸ்வரர் கோயிலில் பகல் 12.30 மணிக்கு அமிர்தா சுரேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. அமிர்தா,மலையாள தொலைக்காட்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டவர். அதே போட்டியில் நடுவராக நடிகர் பாலா பங்கேற்ற போது, இருவரும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடைபெற்றது. இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி, செப்டம்பர் 5ம் தேதியன்று கொச்சியில் உள்ள மலையாள திரைப்பட சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.