Sunday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆந்திராவில் 100 நாட்களைத் தாண்டி

தமிழில் நடிகர் கார்த்தி, தமன்னா நடிப்பில் வெளிவந்த பையா படம், “அவரா” என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. சமீபத்தில் ரிலீசான இந்த படம் ஆந்திராவில் 100 நாட்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. கார்த்தி நடித்த யுகனிகி ஓக்கடு என்ற படம் ஏற்கனவே 100 நாட்களை கடந்து வெற்றி படமாக ஓடியது. தற்போது கார்த்தியின் அவரா படமும் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெலுங்கு டப் படத்தை எடுத்த க்ரீன் ஸ்டூடியோ உரிமையாளர் கே.இ.ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். அது மட்டுமல்ல கார்த்தி நடித்து, தெலுங்கில் டப் செய்யப்பட்ட மேலும் 2 படங்களை விரைவில் திரையிட திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமன்னா கதாநாயகியாக நடித்திருக்கும் அவரா படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார். இப்படத்தை திருப்பதி சகோதர்கள், க்ளவுட் நயன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: