இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகை என்றால் அது ஓவியாதான். களவாணி என்ற இவர் நடித்த முதல் படமே சூப்பர்ஹிட். அதைவிட ஓவியாவின் நடிப்பும் அழகும் சி சென்டர் வரை ரீச்சாயிகியிருக்கிறது. முதல் படம் முடியும் முன்பே மூன்று படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதிகம் சம்பளம் கேட்கிறார், நடிகர் சங்கத்தில் உறுப்பினராகவில்லை என்பது போன்ற சர்ச்சைகளைத் தாண்டி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விரும்பும் நடிகை என்ற பெயர் ஓவியாவுக்கு இருக்கிறது. அவருடனான உரையாடலிலிருந்து. உங்களுடைய திரைப்பட அனுபவத்தின் தொடக்கம் எது? சினிமாவுல நடிக்கிறதுக்கு முன்னால் மாடலிங் செய்துகிட்டிருந்தேன். அதைப் பார்த்துதான் சற்குணம் சார் களவாணி படத்தில் நடிக்கிற வாய்ப்பை தந்தார். களவாணிதான் உங்க முதல் படமா? தமிழ்ல களவாணிதான் முதல் படம். அதுக்கு முன்னாடி மலையாளத்தில் அபூர்வாங்கிற படத்தில் நடித்தேன். அதை நிதின்ங்கிறவர் இயக்கியிருந்தார்.
Thanks to Webdunia