Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறிது காலம் டைரக்ஷனில் இருந்து ஒதுங்கி இருந்த டைரக்டர்

சிறிது காலம் டைரக்ஷனில் இருந்து ஒதுங்கி இருந்த டைரக்டர் பாரதிராஜா, தற்போது மீண்டும் தனது டைரக்ஷன் பணிக்கு திரும்பி உள்ளார். பொம்மலாட்டம் படத்திற்கு பிறகு சிறிய இடைவேளையைத் தொடர்ந்து தனது புதுப்பட வேலையில் பாரதிராஜா மும்முரமாக உள்ளார். முக்கிய வேடத்தில் தான் நடித்து, இயக்கும் இந்த புதிய படத்திற்கு “தென்கிழக்கு சீமையிலே” என பெயரிட்டுள்ளார். இப்படத்தின் மற்றுமொரு ஹைலைட் என்னவென்றால், இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோர் பாரதிராஜாவின் மகன்களாக இப்படத்தில் நடிக்க உள்ளனர். தென் தமிழக கிராமங்களை மாறுப்பட்ட கோணல்களில் காட்டும் படமாக தென்கிழக்கு சீமையிலே இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைக்க வைக்க ஹாரிஸ் ஜெயராஜூடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பபிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Leave a Reply