Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிக்க‌த் தெ‌ரியாமல் பல நேரம் அழுதிருக்கேன்.

இன்றைய தேதியில் கலெ‌க்சன் மாஸ்டர் நடிகர் சூர்யா. இவரது சிங்கம் பாக்ஸ் ஆஃபிஸில் கர்‌ஜித்துக் கொண்டேயிருக்கிறது. “நடிக்க‌த் தெ‌ரியாமல் பல நேரம் அழுதிருக்கேன். அப்படிப்பட்ட என்னை உங்களுடைய விமர்சனம்தான் பக்குவப்படுத்தியிருக்கிறது” என்று பத்தி‌ரிகையாளர்களை பாராட்டும் சூர்யாவின் பேச்சில் அவரது நடிப்பின் முதிர்ச்சி தெறிக்கிறது. பத்திகையாளர்களுடனான அவரது உரையாடலிலிருந்து… சிங்கம் படத்தை தேர்வு செய்ய என்ன காரணம்? ஹ‌ரி சார் கதை சொன்ன விதமும், கதாபாத்திர வடிவமைப்பும் எனக்குப் பிடித்திருந்தது. படிக்கிற காலத்தில் கிராமத்துக்கு தவறாமல் போவேன். இப்போதெல்லாம் போக முடியிறதில்லை. அந்த‌க் குற்றவுணர்வு எனக்கு இருந்துகிட்டேயிருக்கு. என் கிராமத்தை திரும்பிப் பார்க்கிற படமா சிங்கம் இருந்ததால்தான் அதில் நடித்தேன்.

Leave a Reply