Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பில் உணர்ச்சிமிகுதியில் சுனேனா கண்ணீர்

வம்சம் படத்தின் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பில் உணர்ச்சிமிகுதியில் கண்ணீர் விட்டார் சுனேனா. இதுவரை இப்படி கஷ்டப்பட்டு எந்தப் படத்திலும் அவர் நடித்ததில்லையாம். இதற்காகவா அழுகை? இல்லை, நாமா இப்படி நடித்திருக்கிறோம் என்ற ஆச்ச‌ரியத்தில் எழுந்த ஆனந்த கண்ணீர் அது. வம்சம் படத்தில் நடித்ததிலிருந்து புதுக்கோட்டை வாசியாகவே மாறியிருக்கும் அவருடனான உரையாடலிலிருந்து. காதலில் விழுந்தேன் படத்துக்குப் பிறகு இப்போதுதானே உங்கள் பெயர் பரபரப்பாக அடிபடுகிறது, ஏனிந்த இடைவெளி? இடைவெளியெல்லாம் இல்லை. முதல் படம் காதலில் விழுந்தேனுக்குப் பிறகு மாசிலாமணியில் நடித்தேன். அந்தப் படமும் எனக்கு பெயர் வாங்கித் தந்தது. பிறகு கதிர்வேல், திருத்தணி என்று இரண்டு படங்கள். பாடல் காட்சி முடிந்தால் அந்தப் படங்களும் வெளிவந்துவிடும். இடையில் வந்த யாதுமாகி மட்டும் எதிர்பார்த்த அளவு போகவில்லை.

Thanks to Webdunia

Leave a Reply