ஹாலிவுட் பிரபலங்கள் தங்களது அழகான உடல் உறுப்புகளைக் காப்பீடு (இன்சூர்) செய்வது வழக்கம். அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபெஸ் தன்னுடைய பின்னழகைக் காப்பீடு செய்தது உலகம் அறிந்த செய்தி. அந்த வரிசையில் பாலிவுட் நடிகர்கள் பலரும் இணையவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் நடிகர் ஜான் ஆபிரகாம் தனது பின்னழகை ரூ.10 கோடிக்கு காப்பீடு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடையழகி என வர்ணிக்கப்பட்ட நடிகை ரம்பா முன்பு, தனது தொடைரை காப்பீடு செய்திருப்பதாக வந்த செய்தி கோலிவுட்டையே பரபரப்பாக்கிறது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை மினிஷா லம்பா தனது பின்னழகை காப்பீடு செய்திருக்கிறார். காஷ்மீரில் பிறந்த அழகு ரோஜாவான இந்த லம்பா, பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கும் கனவுக் கன்னி. தனது பின்புறம் மிக அழகாக, எடுப்பாக, செக்ஸியாக இருப்பதாக பெருமையுடன் கூறும் மினிஷா, தனது பின்னழகை பலரும் வர்ணிக்கிறார்கள். அதன் அழகில் பல பேர் மயங்கிக் கிடக்கிறார்கள். அந்த பொக்கிஷத்தை நாக்க காக்க விரும்புகிறேன். எனவே இப்போது அதை காப்பீடு செய்ய முடிவு செய்துள்ளேன், என்கிறார். ஆனால் எவ்வளவு தொகை என்பதை சொல்ல மறுத்து விட்டார் அம்மணி.