Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாஸ்கோவின் காவிரி

பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த ரவிவர்மன் முதன் முறையாக இயக்கியிருக்கும் படம் மாஸ்கோவின் காவிரி. நாயகனாக ராகுல், நாயகியாக சமந்தா, ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தன், இசையமைப்பாளர் தமன் என பெரும் பட்டாளமே அறிமுகமாகும் இப்படத்தின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ்:

  • மாஸ்கோவின் காவிரி படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, காஸ்ட்யூம் டிசைன் என அனைத்து பணிகளையும் இழுத்துப் போட்டு செய்திருக்கிறார் டைரக்டர் ரவிவர்மன்.

  • வித்தியாசமான இந்த தலைப்பு படத்தின் கதைக்கு தொடர்புடைய ‌தலைப்பாம். அனைவரையும் விரும்பி பார்க்கவும், திரும்பி பார்க்கவும் வைப்பதற்காக இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார்களாம்.

  • படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்க காமெடிக்கு சந்தானமும், கலைக்கு தோட்டா தரணியும் மெனக்கெட்டிருக்கிறார்கள்

  • 47 நாட்களில் இந்த படத்தை எடுத்து முடித்திருந்தாலும் சில காரணங்களால் ரீலிஸ் ஆகாமல் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இப்போது ரீலிஸ் ஆகிறது.

  • படத்தின் நாயகி சமந்தா முதலில் கமிட் ஆன படம் இந்த படம். ஆனால் அவர் பாணா காத்தாடி படத்தின் மூலம் முதலில் ரசிகர்களுக்கு அறிமுகமாகி விட்டார். தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் சமந்தா அறிமுகமாகி முன்னணி நட்சத்திர பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.

  • காரைக்குடி, திருவாரூர், பாண்டி, சென்னை போன்ற இடங்களில் பாடல்கள் மற்றும் படத்தை எடுத்து முடித்திருக்கின்றனர்.

  • கனல் கண்ணன் சண்டைக்காட்சிகளை ஒரிஜினலாக இருக்கும்படி அமைத்திருப்பதோடு, சில காட்சியிலும் நடித்திருக்கிறார்.

  • மலையாள படம் ஜலமர்மம் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆன ரவிவர்மனுக்கு, மாஸ்கோவின் காவிரி படம் 23வது படமாகும்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: