காளஹஸ்தி சிவன் கோவிலில் ரூ.30 கோடியில் ராஜகோபுரம் அமைப்பதற்கு, ஆந்திர முதல்வர் ரோசய்யா அடிக்கல் நாட்டினார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் உள்ள புகழ் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சிவன் கோவிலின் ராஜகோபுரம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. அதற்கு பதிலாக புதிய ராஜகோபுரம் கட்டப்பட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதைத்தொடர்ந்து ரூ.30 கோடி செலவில் புதிய ராஜகோபுரம் கட்டுவதற்கு தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஆந்திர முதல்வர் ரோசய்யா, புதிய ராஜகோபுரம் கட்டுவதற்கான அடிக்கல் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், இன்னும் 2 ஆண்டுகளில் ராஜகோபுரம் கட்டி முடிக்கப்படும் என்றார்.
அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர அமைச்சர்கள், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.