Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லலலா படத்தை இயக்கியிருப்பதுடன் ஹீரோவாகவும்

எனக்கு 20 உனக்கு 18, கேடி படங்களை இயக்கிய ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா இப்போது நடிகர். ஊலலலா படத்தை இயக்கியிருப்பதுடன் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பிஸியாக இருந்தவரை ஓரங்கட்டினோம். எல்லா கேள்விகளுக்கும் யதார்த்தம் மீறாமல் இயல்பாக வந்து விழுகின்றன பதில்கள். 17 வயதில் கதாசி‌ரியர், 20 வயதில் இயக்குனர். எப்படி இது சாத்தியமாயிற்று? எல்லாத்துக்கும் அப்பாதான் (ஸ்ரீ சூர்யா மூவிஸ் ஏ.எம்.ரத்னம்) காரணம் சார். அப்பா புரொடியூசராக இருந்ததால சின்ன வயசிலேயே சினிமா ஆர்வம். பைத்தியம்னே சொல்லலாம். ஸ்கூல் இல்லைன்னா ஒரு நாளைக்கு நாலைஞ்சு படங்கள்கூட பார்ப்பேன். தமிழ் மட்டுமில்லாம தெலுங்கு, இந்தி, இங்கிலீஸ் தெ‌ரியும்ங்கிறதால எந்தப் படத்தையும் விடுறதில்லை. அப்பா புரொடியூஸ் பண்ற படங்களோட கதைகளை சொல்லும் போது எனக்கு தோணுற கரெ‌க்சன்ஸ் சொல்வேன்.

Thanks to Webdunia

Leave a Reply