4 நாள் பயணமாக வரும் 30ஆம் தேதி இலங்கை வரும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவை, தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என, அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,
இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், அவர்களுக்கான வீடு கட்டும் திட்டங்கள், விமான மற்றும் துறைமுக விரிவாக்கம் ஆகியவற்றில் இந்தியாவின் பங்கீட்டினை ஆராய்வதற்காக நிருபமா ராவ் இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அவரது நிகழ்ச்சிகள் பற்றி எனக்கு தெரியாது. இருப்பினம் மீள் குடியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை நிருபமா ராவ் பார்வையிடுவது என்பது, தமிழ் மக்களுடன் தொடர்புடையது. இதனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் அவர்களின் பிரச்சனைகளை எடுத்துரைப்பதற்காக அவரை சந்திக்க வேண்டியுள்ளது.
தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் உள்ளிட்ட எம்.பி.க்கள் சிலர் நாட்டில் இல்லை. 30ஆம் தேதி வரும் நிருபமா ராவ், மீண்டும் இந்தியா திரும்ப மூன்று நாட்கள் ஆகும் என்பதாலும், தமிழ்ச் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கும் வாய்ப்பு உள்ளது என்றார்.
Thanks to Nakkeeran