Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இன்று தங்கம் விலையில் சரிவு

சென்னை: இன்று தங்கம் விலையில் 2-வது நாளாக சரிவு ஏற்பட்டது. பவுனுக்கு ரூ. 72 குறைந்து ரூ. 13 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ரூ. 1,735ஆக இருந்தது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது. சில சமயங்களில் ரூ. 14 ஆயிரத்தை கடந்தும் சென்றது
இந்த மாத தொடக்கத்தில் எகிறிய தங்கம் விலை திடீரென சரிந்து ரூ. 13 ஆயிரத்து 700-க்கு விற்கப்பட்டது. சில நாட்களிலேயே மீண்டும் ரூ. 14 ஆயிரத்தை கடந்தது.
இந்நிலையில் படிப்படியாக குறைந்து கடந்த சனிக்கிழமை ரூ. 13 ஆயிரத்து 976-க்கு விற்கப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ. 24 குறைந்து. ரூ. 13 ஆயிரத்து 952-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: