பொதுத்துறை வங்கியான யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு, மத்திய அரசு ரூ.250 கோடி முதலீடு வழங்கியுள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் முதலீடுகளை அதிகரிக்க, ஏற்கனவே நிதி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த திட்டத்தின் கீழ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு ரூ.250 கோடி வழங்கியுள்ளது. இதற்கான கடிதத்தை ஜுன் 2 ஆம் தேதி அரசு அனுப்பி இருப்பதாக, இந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.
இந்த நிதிக்கான சம தொகையை, குடியரசுத் தலைவர் பெயரில் ப்ரிபெடில் நான்-குமுலேடிவ் பிரிபேரன்ஸ் பங்குகளாக வழங்கும் படியும் அரசு தெரிவித்துள்ளது.
யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஜுன் 4 ஆம் தேதி குடியரசுத் தலைவர் பெயருக்கு ரூ.1 லட்சம் முக மதிப்புள்ள 25,000 ப்ரிபெடில் நான்-குமுலேடிவ் பிரிபேரன்ஸ் பங்குகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
Thanks to Webdunia