12 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேளாண் துறை வளர்ச்சி 4 விழுக்காடாக இருக்க வாய்ப்பு இருப்பதாக திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.
வேளாண் துறை வளர்ச்சி 10, 11 வது ஐந்தாண்டு திட்ட காலங்களில் அரசு நிர்ணயித்த அளவை எட்டவில்லை.
இந்நிலையில் மான்டேக் சிங் அலுவாலியா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 2012 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேளாண் துறை வளர்ச்சி 4 விழுக்காடாக இருக்க வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நல்ல வளர்ச்சி ஆகும். இது வரை வேளாண் துறையில் இந்த அளவு வளர்ச்சி அடைந்ததில்லை. அத்துடன் இது 11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தை விட அதிகம்.
11 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், இதற்கு முந்தைய பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தைவிட (2002-07) வேளாண் துறை வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளோம். இத்துறையில் இது வரை 4 விழுக்காடு வளர்ச்சி அடைந்ததில்லை என்று கூறினார்.
Thanks to Web Dunia