தீவிரவாதத்தை காவி நிறத்துடன் ஒப்பிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளே காவி தீவிரவாதம் என்ற வார்த்தையை பயன்படுத்தாத நிலையில் சிதம்பரம் அதனை பயன்படுத்தியுள்ளது வருத்தம் அளிப்பதாக கூறியுள்ளார்.
தீவிரவாதத்துடன் சாதி, மதம், நிறம் ஆகியவற்றை தொடர்புபடுத்தி பேசுவதை எதிர்க்கிறேன் என்றும் இந்தியாவில் வீரத்தை பறைசாற்றும் விதமாக காவி பயன்படுத்தப்படுவதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதத்துக்கு எந்த நிறமும் கிடையாது. மத அடிப்படைவாதிகளிடம் இருந்து தீவிரவாதம் உருவாகிறது என்றும் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.