1982ல் வெளிவந்து தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. இப்படம் பல புதியவர்களை தமிழ்த் திரையுலகிற்கு அடையாளம் காட்டியது.புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இந்தப்படம் மூலமாகத்தான் வெளிச்சத்திற்கு வந்தார்கள். சட்டம் ஒரு இருட்டறை தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு , கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. அனைத்து மொழிகளிலும் இப்படத்தை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன்தான்.
மீண்டும்… சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தை தமிழில் தயாரிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகரன். இன்றைய காலகட்டத்திற்கேற்ப கதையையும், காட்சியையும், தொழில் நுட்பத்தையும் நவீனப்படுத்தி படமாக்க உள்ளார். இப்படத்திற்கான கதாநாயகன், கதாநாயகி, தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்க பல இளம் நடிகர்கள் விருப்பம் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.விரைவில் இதன் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.