Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரூ.100 அபராதம்

பாலிவுட் பிரபல நடிகர் அஜய்தேவகனுக்கு போலீசார் ரூ.100 அபராதம் விதித்துள்ளனர். அவர் தற்போது கோல்மால் த்ரீ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் கோவாவில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின்போது அஜய்தேவ்கன் சிகரெட் பிடித்தார். அதனை உள்ளூர் பத்திரிகை போட்டோகிராபர் படம் பிடித்து பத்திரிகையில் வெளியிட்டார். இதையடுத்து அஜய் தேவ்கனுக்கு எதிராக ‌பொதுநல அமைப்பு போராட்ட களத்தில் குதித்தது. சுகாதாரத்துறை இயக்குனரிடமும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அஜய்தேவ்கன் உண்மையிலேயே சிகரெட் பிடித்தாரா? என்பது பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புகைபிடித்தது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அஜய்தேவ்கன் மீது வழக்கு பதிவு செய்து, அவருக்கு ரூ.100 அபராதம் விதித்தனர். அஜய் தேவ்கன் உடனடியாக அபராத தொகையை கட்டினார்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட பொதுநல அமைப்பே சேர்ந்தவர்கள் கூறுகையில், அபராதத் தொகை சிறியதாக இருந்தாலும், சட்டத்தை மீறக்கூடாது என்பதை அவர் உணர வேண்டும். எனவே அபராதம் விதித்தில் மகிழ்ச்சி, என்றனர். நடிகர் அஜய்தேவ்கன் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம், சண்டிகரில் இதேப்போல ‌பொது இடத்தில் சிகரெட் பிடித்து, அபராதம் கட்டினார் என்பது கூடுதல் தகவல்

Leave a Reply