Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கன்னடத்தில் 12 படங்களையும், தெலுங்கில் சில படங்களையும் தயாரித்துள்ள ஸ்வேதா

கன்னடத்தில் 12 படங்களையும், தெலுங்கில் சில படங்களையும் தயாரித்துள்ள ஸ்வேதா என்டர்பிரைசஸ் சார்பில் ஆனேக்கல் பாலராஜூ கதை எழுதி தயாரித்து தனது மகன் சந்தோஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ள படம் தம்பி ஊருக்கு புதுசு. தணிகைபாரதி எனும் புதியவரின் திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன், விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், பாடலாசிரியர் பிறைசூடன், கோலங்கள் திருச்செல்வம் உள்ளிட்ட சில விஐபிக்களே கலந்து கொண்டனர். ஆனால் விழா அழைப்பிதழில் எண்ணற்ற இயக்குனர்களின் பெயர்கள் சிறப்பு விருந்தினர்கள் லிஸ்ட்டில் இருக்க… அவர்கள் அனைவரும் மிஸ்ஸிங்.
மேடையேறிய வி.சி.குகநாத‌ன் இதுபற்றி பேசும்போது, வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் நம்மூரில் படம் எடுக்க வந்திருக்கிறார்கள். அவர்களிடம் விழாவுக்கு வருவதாக வாக்களித்துவிட்டு இவ்வாறு அழைப்பிதழில் ‌பெயர் போட்ட பிறகு பலரும் கலந்து கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இது நல்ல பண்பும் அல்ல, நாகரீகமும் அல்ல..! சிறப்பு விருந்தினர்கள் லிஸ்ட்டில் நிறைய நடிகர் – நடிகைகள் பெயர் இருந்தால் நான் அதுபற்றி பேச மாட்டேன். ஆனால் இயக்குனர்கள் வருவதாக பெயர் கொடுத்து விட்டு வராமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இதை நான், 24 சங்கங்கள், யூனியன்களின் கூட்டமைப்பான பெப்ஸியின் தலைவர் எனும் முறையில் சொல்லவில்லை. நானும் ஒரு டைரக்டர், தொழில்நுட்ப கலைஞர் எனும் முறையில் சொல்கிறேன். வருத்தப்படுகிறேன். இனி இதுமாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வர முடியாது என்றால் ஒப்புக் கொள்ளக் கூடாது. பெயர் போடவிடக் கூடாது, என்றார். கூடவே இப்படத்தின் ியக்குனர் தணிகை பாரதி தணிக்கை பாரதியாக இரு்பார் போலும். இங்கு இரண்டு பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. அதில் சைடில் ஆடும் டான்ஸர்கள் எல்லாம் அழகானவர்களாக பொறுக்கி எடுத்து பயன்படுத்தி இருப்பதிலேயே அவர் திறமையானவர் என்பது தெரிகிறது என்று கூறி சிரிப்பலையையும் ஏற்படுத்தி அமர்ந்தார் வி.சி.கு.!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: