Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜீவனும், மேக்னாவும் நடித்துள்ள முத்தக்காட்சி

திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய அனுபவத்துடன் டைரக்டர் ஸெல்வன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் கிருஷ்ண லீலை. சமுதாய கருத்துக்களை உள்ளடக்கிய பொழுது போக்கான ஒரு படமாக உருவாகும் இப்படத்தை டைரக்ரட் பாலசந்தர், புஷ்பா கந்தசாமி ஆகியோர் தயாரிக்கிறார்கள். கிருஷ்ண லீலையின் ஸ்பெஷல் ஹைலைட்ஸ் வருமாறு:-
கிருஷ்ண லீலை படத்தின் கதையை சுமார் இரண்டரை மணி நேரம் கேட்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் கே.பாலச்சந்தர். கதையை கேட்டுமுடித்ததும், இப்படி ஒரு கதை எழுதி இருக்கிறாயே… உனக்கு பயம் இல்லையா என கேட்டாராம். அதற்கு, பதில் சொன்ன டைரக்டர் ஷெல்வன், தண்ணீர் தண்ணீர் கதையை நீங்கள் எழுதும்போது உங்கள் பேனாவிருக்கு எப்படி பயம் இல்லையோ அப்படியே என் பேனாவிற்கும் பயம் இல்லை, என்று கூறியிருக்கறார். இதையடுத்து பாராட்டி, படத்தை உடனே ஆரம்பிக்க சொல்லி உற்சாக படுத்தினாராம் கே.பி., கிருஷ்ணலீலை என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தது குறித்து டைரக்டர் ஸெல்வன் கூறுகையில், 500 பக்கங்கள் உள்ளடங்கிய கிருஷ்ணா என்ற புத்தகத்தை படிக்கும்போது கிருஷ்ணரின் அவதாரதிற்கான காரணம் கண்டு கொள்ள முடிந்தது. அவரின் அவதாரம் கோபியர்களை கொஞ்சுவதற்காக எடுக்கப்பட்டதல்ல…! கம்சன் போன்ற கொடியவர்களை அழிக்க எடுக்க பட்ட அவதாரம் என்பதால் தனது படத்திற்கு கிருஷ்ண லீலை என்ற தலைப்பை தேர்தெடுத்ததாக கூறுகிறார், கதைக்கு நாயகனாக நடிகர் ஜீவன் நடித்தால் நன்றாக இருக்க வேண்டும் என கருதிய டைரக்டர், அதுபற்றி கவிதாலயாவிடம் தெரிவித்திருக்கிறார். அவர்கள் உடனடியாக ஜீவனிடம் பேசி, கதை சொல்ல ஏற்பாடு செய்திருக்கிறார். கதையை கேட்ட ஜீவன், அடுத்த நிமிடமே டபுள் ஓ.கே. சொல்லி நடிக்க தயாராகி விட்டாராம், நாயகியாக நயன்தாராவை கேட்டிருக்கிறார் டைரக்டர். அவர் நடிக்க மறுத்தால் நயன்தாரவை போன்ற ஒரு பெண்ணை அறிமுகம் செய்ய வேண்டும் என உறுதி கொண்டு பெங்களூர் மேக்னாவை கண்டுபிடித்து அறிமுகம் ‌செய்திருக்கிறார்கள், கிருஷ்ண லீலைக்கு முதலில் வசனம் எழுத எழுத்தாளர் சுஜாதாவிடம்தான் கேட்டிருக்கிறார்கள். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதால் டைரக்டர் ஸெல்வனே வசனம் எழுதியுள்ளார். டைரக்டர் ஸெல்வன் இந்த படத்திற்கு முதல் முதலாக இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் ரொமான்டிக் பாடலான லை லை லீலை செய் நீ…. என்ற பாடலையும், தீம் பாடலையும் எழுதியிருக்கிறார் அவர். படத்தில் கிளைமாக்ஸ் பாடலில் 10 ரோபோக்களின் கலக்கல் டான்ஸ் இடம்பெறுகிறது. இது குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் கவரும் வகையில் புதுமையானதாக இருக்கும். படத்தின் சூட்டிங் சென்னை, விருதாச்சலம், நெய்வேலி, முதனை கிராமம், வேப்பம்பட்டு ஆகிய இடங்களிலும், பாங்காக், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நடத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ண லீலையில் நாயகன் ஜீவன் ஜீவன் ஐஏஸ் படிக்கும் மாணவனாக நடிக்கிறார். வழக்கான தோற்றத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, நீளமான தலை முடியை வெட்டி ரசிக்கும்படியான தோற்றத்தில் ஜீவன் நடித்திருக்கிறார். படத்தில் பெரும்பாலான முக்கிய கேரக்டர்களில் புதிய முகங்கள் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக முதனை என்ற கிராமத்திலிருந்து 88 வயது ஒரு பாட்டியை முக்கியமான கேரக்டரில் நடிக்க வைத்து அவரையே டப்பிங் பேச வைத்திருப்பதும் ஹைலைட் சமாச்சாரமாக இருக்கும். சாமி படத்திருக்கு பிறகு தனக்கு இப்படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் கிருஷ்ண லீலையில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். அவர் இந்த படத்தில் ஹீரோவுக்கு இணையாக கைத்தட்டல் வாங்கும் அளவுக்கு ரசித்து நடித்திருக்கிறாராம். படத்தில் சண்டை கட்சிகள் மிக பிரமாண்டமாக படமாக்கபட்டுள்ளது. ஏ.வி.எமில் நடந்த ஒரு சண்டைக் காட்சியின்போது ரிஸ்க்கான காட்சியில் சண்டை நடிகர் ஒருவருக்கு கண்ணடி குத்தி படுகாயம் ஏற்பட்டது. அப்படியிருக்கும் காட்சியின் தத்ரூபத்துக்காக அவர் நடித்துக் கொடுத்தார். ஜீவன் சில காட்சிகளில் மாஸ்க் மாட்டி கொண்டு நடித்துள்ளார். மாஸ்க் மாட்டினால் முகத்திற்கு காற்று வராமல் இருந்தபோதிலும் காட்சியின் முக்கியத்துவம் கருதி சிரமப்பட்டு, நடித்துக் கொடுத்திருக்கிறார். எம்ஜிஆருக்கு டூப் போட்ட மாஸ்டர் ஒருவரை கிருஷ்ண லீலையின் முக்கியமான கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் ஸெல்வன். பல்லாண்டு கால அனுபவம் மிக்க அந்த மாஸ்டர் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறாராம்.
படத்தின் ஹைலைட் காட்சிகளில் ஒன்று ஜீவனும், மேக்னாவும் நடித்துள்ள முத்தக்காட்சி. காட்சியின் முக்கியத்துவத்தை சொன்னதும் மிகவும் அன்னியோன்யமாக நடித்து கொடுத்திருக்கிறார்கள். ஜீவனின் நண்பர்களாக கஞ்சா கருப்பு, கருணாஸ் நடித்துள்ளனர். நாசர், சரத் பாபு ஆகியோர் மிகவும் ஸ்ட்ராங்கான கேரக்டரில் நடித்துள்ளனர். படத்தின் டைரக்டர் ஸெல்வனும் முதன் முறையாக ஒரு இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் தொகுதியான விருதாச்சலத்தில் ஒரு அரசியல் கூட்டம் போன்ற காட்சி இரவு நேரத்தில் படமாக்கப்பட்டிருக்கிறது. அந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து பங்கேற்று சூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

Leave a Reply