நந்தி – விஷன் எக்ஸ் மீடியா பட நிறுவனம் சார்பில் தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம். கள்வனின் காதலி, மச்சக்காரன் ஆகிய படங்களை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கல்லூரி, வால்மீகி நாயகன் அகில் – ரேணிகுண்டா சனுஷா ஜோடி நடிக்கின்றனர். இப்படத்தில் பரத்வாஜின் இசையில் எம்.பி.ரத்தீஷின் ஒளிப்பதில் இடம்பெறும் சங்குச் சக்கர சாமி வந்து ஜிங்கு ஜிங்குனு ஆடிச்சாம் எனும் பாடல் காட்சியில் மலேசியாவை சேர்ந்த அழகிகள் நோராவும், தனுஷியாவும் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்களாம். முத்து விஜயனின் பாடல் வரிகளை சின்னப்பொண்ணு பாட, டான்ஸ் மாஸ்டர் தாரா நடனம் அமைத்திருக்கும் இப்பாடல் காட்சி, சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள கவுல்பஜாரில் படமாக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமாவுக்கு இப்போது உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக மலேசிய மக்கள் தமிழ் சினிமாவை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்படிப்பட்ட மலேசிய மக்களை கவுரவப்படுத்தும் எண்ணத்தில்தான் அங்கிருந்து நடிகைகளை தேர்வு செய்து இப்படத்தில் நடிக்க வைத்தோம். இந்த அணுகுமுறை நந்தி பட வெற்றிக்கு நிச்சயம் உதவும் என்கிறார் இப்படத் தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக்! அப்ப சரி!