கனவே கலையாதே படத்தை சில வருடங்களுக்கு முன்பு இயக்கியவரும், சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை சொன்ன சந்தனக்காடு தொடரை மக்கள் டிவியில் இயக்கி பரபரப்பிற்கு உள்ளானவருமான வ.கவுதமன் இயக்கி, கதாநாயகராகவும் நடிக்கும் படம் மகிழ்ச்சி. அதிர்பு திரைப்பட்டறை த.மணிவண்ணன் தயாரிப்பில், வித்யாசாகர் இசையில் செழியன் ஒளிப்பதிவில் பிரபல எழுத்தாளர் நீல பத்மநாபனின் தலைமுறைகள் நாவலை மகிழ்ச்சி திரைப்படமாக உருவாக்கி வரும் கவுதமனுக்கு, இப்படத்தில் அங்காடித்தெரு அஞ்சலிதான் ஜோடி. வித்தியாசமாக கண்சாடை காட்டுவதில் தொடங்கி, உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது வரை எக்கச்சக்கமான விஷயங்களில் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பு கொடுத்தாராம் அஞ்சலி. இதனால் படம் நன்றாக வந்திருப்பதாக மகிழ்ச்சி பொங்க சொல்கிறார் மகிழ்ச்சி பட இயக்குனர் கம் ஹீரோ கவுதமன். அட, அடடே!!