சிம்புவுடன் “சிலம்பாட்டம்” படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் சனாகான். “தம்பிக்கு எந்த ஊரு” படத்திலும் நடித்தார். இரு படங்களிலுமே கவர்ச்சியாக வந்தார்.
இதனால் சனாகானை தமிழ் பட உலகினர் கவர்ச்சி பொம்மை என்றும் கவர்ச்சி தவிர குடும்பபாங்கான வேடங்களில் நடிக்க தெரியாதவர் என்றும் சனாகானை விமர்சித்தனர். இதனால் வருத்தத்தில் இருக்கிறார் சனாகான். அவர் சொல்கிறார்.
என்னை கவர்ச்சி பொம்மை என்றும் கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுவேன் என்றும் விமர்சிக்கின்றனர். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது “ஆயிரம் விளக்கு” படத்தில் நடிக்கிறேன். இதில் படம் முழுக்க பாவாடை தாவணியில் வருகிறேன். இந்த படம் மூலம் என் மீதான கவர்ச்சி முத்திரை மாறும்.
நான் மும்பையில் இருந்து வந்து இருக்கிறேன். எனவே கதைக்கு கிளாமராக நடிப்பது பெரிய விஷயமாக படவில்லை. தமிழ் திரையுலகில்தான் கிளாமரை பிரித்து பார்க்கிறார்கள். கிளாமரை ஆடை அணிவதை வைத்து கணக்கிட முடியாது. ஹேமமாலினி, ஸ்ரீதேவி போன்றோர் புடவை கட்டித்தான் நடித்தார்கள். அதிலும் கவர்ச்சி தெரிந்தது.
தமிழ் திரையுலகில் அழகான திறமையுள்ள புது நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக இருக்கிறேன்