Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தி.மு.க. ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன், வட சென்னை மாவட்ட செயலாளர் வி.எஸ்.பாபு ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சி தந்த காவியத்தலைவர் தமிழ்மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ் நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர்- கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலார் பேரறிஞர் அண்ணாவின் 102-வது பிறந்த நாளான 15-ந்தேதி காலை 8 மணி அளவில் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு முதல்வர் தலைவர் கருணாநிதி மற்றும் கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
அப்போது மத்திய, மாநில அமைச்சர் பெருமக்கள், முன்னாள்-இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக, பகுதிக்கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அணியினரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply