Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹாலிவுட் நிறுவனத்துடன் டைரக்டர் முருகதாஸ்

கஜினி படத்தின் மூலம் பாலிவுட்டின் முன்னணி இயக்குனராக தன்னை உயர்த்திக் கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ், பிரபல ஹாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறார். டைடானிக், அவதார் உள்ளிட்ட பிரமாண்ட ஆங்கிலப் படங்களை தாயரித்த நிறுவனம் 20 சென்சுரி ஃபாக்ஸ். 75 ஆண்டுகளாக 42 நாடுகளில் படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் இந்தியாவிலும் தனது கிளையை பரப்பவுள்ளது. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ என்ற பெயரில் ஆங்கிலப் படங்களை இந்தியாவில் வினியோகம் செய்து வருகிறது. பல இந்திப் படங்களையும் தயாரித்துள்ள இந்நிறுவனம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து தென்னிந்திய மொழிப் படங்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இதுபற்றி டைரக்டர் முருகதாஸ் கூறுகையில், “பத்திரிகையாளனாக, சிறுகதை எழுத்தாளனாக, உதவி இயக்குநராக, வளர்ந்துவந்த நான் இப்போது தயாரிப்பாளர் ஆகியுள்ளேன். இந்தி கஜினியை இயக்கியபோது, ஃபாக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு இந்தி படம் இயக்கித்தர சொன்னார்கள். அப்போது எனது அடுத்த படம் தமிழுக்குத்தான் என்று உறுதியாக சொன்னேன். பிறகு படம் தயாரிக்க முடியுமா? என்று கேட்டார்கள். நான் உடனே அதற்கு சம்மதம் தெரிவித்தேன். இதற்கு காரணம் திறைமையுள்ள உதவி இயக்குநர்கள் நிறையபேர் இங்கு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வாய்ப்பை அமைத்துதரும் நோக்கத்தில்தான் நான் தயாரிப்பாளரானேன். இந்தியாவிலேயே நல்ல கிரியேட்டர்கள் தமிழ் சினிமாவில்தான் இருக்கிறார்கள் என்று நான் அடித்து சொல்வேன். அப்படிப்பட்டவர்களின் திறமை சரியாக முறையில் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடுகிறது. இதுபோன்ற ஹாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிப்பதன் மூலம், நமது தமிழ்ப் படங்களின் புகழ் வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டப்படும். அதுமட்டுமின்றி இதுபோல நிறுவனத்திற்கு படம் பண்ணும்போது முதல் படமே பெரிய அளவில் வெற்றியாக இருக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். எனது முதல் தயாரிப்பாக, என்னிடம் எனது முதல் படத்தில் இருந்து உதவி இயக்குநாரக இருந்த சரவணன் இயக்குகிறார்.” என்றார்.
இன்னும் பெயரிடப்படாத இப்புதிய படத்தின் நாயகர்களாக விமல் மற்றும் ஜெய் நடிக்கிறார்கள். கதாநாயகி யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை. தமன் இசையமைக்க உள்ளார். டைரக்டர் முருகதாஸ் ஆண்டுக்கு 2 படங்கள் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

Leave a Reply