தனது படத்தின் விளம்பரத்திற்காக டைரக்டர் சாமி சர்ச்சையை கிளப்பி விட்டிருப்பதாக சிந்து சமவெளி விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மருமகள் மீது சல்லாபம் கொள்ளும் மாமனார் பற்றிய கதையம்சத்துடனான சிந்து சமவெளி படத்தை இயக்கிய டைரக்டர் சாமிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாக முதலில் செய்திகள் வெளியாயின. சாமியே பேட்டியின் வாயிலாக இதனை ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதன் பின்னர் சாமியின் கார் கல் வீசி தாக்கப்பட்டது. இதுகுறித்து டைரக்டர் சாமி போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சாமி மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். படத்தை ஓட வைக்க சாமியே திட்டமிட்டு இந்த பரபரப்பை கிளப்புகிறாரோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுளளதாம். அப்படி சாமி விளம்பரத்திற்காக இதை செய்தார் என்று உறுதியானால் அவரையே கைது செய்யவும் திட்டமிட்டுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சாமியைப் போலவே படத்தின் நாயகி நடிகை அனகாவும் தனக்கு கொலை மிட்டல் வந்ததாக போலீசில் புகார் செய்துள்ளார். அவரிடமும் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.