ஜீவா – அனுயா நடித்த சிவா மனசுல சக்தி படத்தை இயக்கிய ராஜேஷின் அடுத்த படைப்பு பாஸ் என்கிற பாஸ்கரன். உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஹைலைட்ஸ்:
ஆர்யா – நயன்தாரா முதன் முதலாக இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடி நடிகர் சந்தானம் பாஸ் படத்தில் ஆர்யாவின் நண்பனாக படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் வருகிறாராம். காமெடிக்கு பஞ்சமில்லை. படப்பிடிப்பு கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, சென்னையில் நடந்துள்ளது. 2 பாடல்கள் சுவிஸிலும், 2 பாடல்கள் சென்னை, கும்பகோணத்திலும் படமாக்கப்பட்டுள்ளது. கும்கோணத்தில் நடக்கின்ற கதை என்பதால் கும்பகோணம், அக்ரஹாரம், ஆற்றங்கரை, பாலங்கள், பசுமையான பகுதிகள் அனைத்தையும் காமிராவில் திறம்பட பதிவு செய்திருக்கிறார் சக்தி சரவணன். கண்களுக்கு இதமளிக்கும் குளிர்ச்சியான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. படத்தில் ஆர்யா, பாஸ் என்கிற பாஸ்கரனாக வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் கேரக்டரிலும், நயன்தாரா கல்லூரி இறுதியாண்டு படிக்கும் சந்திரிகாவாகவும் நடித்துள்ளனர். சந்தானமும், ஆர்யாவும் இந்த படத்திற்காக நண்பேன்டா என்ற வார்த்தையை 15 முறைக்கு மேல் பயன்படுத்தியிருக்கிறார்கள். யுவன் இசையில் யார் இந்த பெண் என்ற பாடலை சென்னை, கும்பகோணத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மிகவும் யதார்த்தமாக, நேர்த்தியாக படம் பிடித்துள்ளனர். நான் கடவுள் ராஜேந்திரன் வில்லனாகவும், பஞ்சு, ஆர்யாவின் சகோதரனாகவும், லஷ்மி ராமகிருஷ்ணன் ஆர்யா அம்மாவாகவும் நடித்துள்ளனர். நளினி ஸ்ரீராம் – நயன்தாராவின் உடைகளை அழகாக வடிவமைத்துள்ளார். மதராசபட்டனம் படத்தின் ஆடை வடிவமைப்பாளர் தீபாலி, ஆர்யாவுக்கான உடைகளை வடிவமைத்துள்ளார்.