Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

களத்தூர் கண்ணம்மா முதல் மருதநாயகம் வரை

கேரள அரசு சார்பில் நடிகர் கமல்ஹாசனுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா நிகழ்ச்சியை, ஜெயா டிவி ஒளிபரப்புகிறது. கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி அவருக்கு பாராட்டு விழாக்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. கேரள அரசு சார்பிலும் கமலுக்கு பிரமாண்ட பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவுக்கு மலையாள நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், அவர்கள் அந்த விழாவை புறக்கணித்ததும், மலையாள ஸ்டார்களின் புறக்கணிப்பை விழாவில் பங்கேற்றவர்கள் சிலர் விமர்சித்ததும் தெரிந்த சங்கதிதான். மலையாள நட்சத்திரங்கள் புறக்கணித்தபோதிலும் அந்த விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
கமல்ஹாசனுக்கு நடந்த பாராட்டு விழா நிகழ்ச்சியை ஜெயா டிவி ஒளிபரப்ப உள்ளது. நாளை (11ம்‌தேதி) ஜெயா டிவியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த நிகழ்ச்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியோடு கமல்ஹாசனின் சிறப்பு பேட்டியும், கமல்ஹாசன் பற்றி திரையுலக பிரபலங்கள் அளிக்கும் சிறப்பு பேட்டியும் ஒளிபரப்பப் படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு களத்தூர் கண்ணம்மா முதல் மருதநாயகம் வரை என பெயரிடப்பட்டிருப்பதாக ஜெயா டிவி தெரிவித்துள்ளது.

Leave a Reply