உங்களுக்கு எதிரி இருக்கிறானா? அவனைப் பார்த்து சிரியுங்கள். அவனைச் செயல் இழக்கச் செய்வதற்கு இதை விடப் பெரிய ஆயுதம் வேறு எதுவும் தேவையில்லை.
ஒரு அவமானம் உங்கள் மீது வீசப்படுமானால் அதைப் பார்த்து சிரியுங்கள். அப்படி நீங்கள் சிரிக்காவிட்டால், அந்த அவமானத்தை ஏற்கத் தகுதியானவர் நீங்கள் என்று ஆகிவிடும்.
எந்த ஒரு விஷயத்திலும் ஆழமான கவனத்தைச் செலுத்தும் போதுதான் வெற்றி உத்திரவாதமாகிறது.
பிரச்சனைகளைத் தீர்க்கின்றவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை, புகழையும் செல்வத்தையும் கொடுக்கிறது.
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நீங்கள் தெரிந்துகொள்ளுகின்ற போது, அதற்கான துணிச்சலை நீங்கள் பெறுகின்ற போது, வாழ்க்கையில் உங்கள் மதிப்பையும் நீங்கள் உயர்த்திக் கொள்ள முடியும்.
நன்றி: DRCET
Golden Sentences