இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில் அகில இந்திய அளவில் சுங்க வரி, மத்திய கலால் வரி மற்றும் சேவை வரி ஆகிய மறைமுக வரி ரூ.1,24,170 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது 45 விழுக்காட்டிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. இந்த ஐந்து மாத காலத்தில் சுங்க வரி வசூல் ரூ.51,866 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே காலத்தின் வரி வசூலை விட 66.5 விழுக்காடு கூடுதலாகும். இதே காலத்தில் மத்திய கலால் வரி வசூல் ரூ.49,672 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் வரி வசூலைவிட 41.7 விழுக்காடு அதிகமாகும். இதே போல இந்த ஐந்து மாத காலத்தில் சேவை வரி வசூல் ரூ.22,632 கோடியாகும். இது கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும் போது 19.8 விழுக்காடு உயர்வாகும்.