சிந்துசமவெளி சர்ச்சை ஓய்ந்தாலும் அதன் தாக்கம் இன்னும் ஒய்ந்தபாடில்லை. படத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாமனாரால் சூறையாடப்பட்டு,
பின்னர் அந்த மாமனார் மீதே மோகம் கொள்ளும் மருமகளாக நடித்திருக்கும் அனகா ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கு சமீபத்திய உதாரணம்தான் இந்த செய்தி. சிந்து சமவெளியைத் தொடர்ந்து அனகா நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் மைனா.
படத்தில் முழுக்க முழுக்க அனகா கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தாலும், அந்த படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புக்கு அம்மணி வரவில்லை. இதுபற்றி விசாரித்தால், மைனா தரப்பில் இருந்து அனகாவுக்கு தடை போடப்பட்டிருந்தது தெரியவந்தது. நடிப்பில் இன்னொரு ஜோதிகா என்று சொல்லும் அளவிற்கு அம்மணியின் நடிப்பு ட்ரைலரில் பளிச்சிடுகிறது.
ஆனால் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தால் பலரும் சிந்துசமவெளி பற்றிய கேள்வி கேட்பார்கள்(!) என்பதாலோ என்னவோ டைரக்டர் பிரபு சாலமன் வராதேம்மா இங்கே என அனகாவுக்கு ரெட் போட்டிருக்கிறார்.