இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 123.51 புள்ளிகள் அதிகரித்து 9,470.47 புள்ளிகளுடனும், நிப்டி 45.85 புள்ளிகள் அதிகரித்து 5,841.40 புள்ளிகளுடன் காணப்படுகின்றன.
இதற்கு முன்னால் ஆரம்பித்துள்ள ஆசிய பங்குச் சந்தைகளில் ஜப்பான் பங்குச் சந்தை நிக்கி 220 புள்ளிகள் அதிகரித்தும், ஹாங்காங் பங்குச் சந்தை ஹன்சம் பெரிய அளவில் மாற்றமின்றி 8 புள்ளிகள் அதிகரித்தும் காணப்படுகிறது.
தென் கொரிய பங்கு சந்தை கோசி பெரிய அளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.
நேற்றிரவு முடிந்த அமெரிக்க பங்குச் சந்தைகள் பெரிய அளவில் மாற்றமின்றியே முடிந்திருக்கிறது.
நவஜோன்ஸ் பங்குச்சந்தை 18 புள்ளிகள் குறைந்து 10,526 புள்ளிகளுடனும், நாட்ஷாக் பங்குச் சந்தை 4 புள்ளிகள் அதிகரித்து 2,290 புள்ளிகளுடன் முடிந்திருக்கிறது.
இன்று காலை நேர வர்த்தகப்படி இந்திய ரூபாயின் மதிப்பு 46 ரூபாய் 42 பைசாவாகவும் காணப்படுகிறது.
thanks webdunia