பிரபல சாமியார் நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவாவும் படுக்கை அறையில் ஒன்றாக இருந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நாட்களில் அரசியல், சினிமா, ஆன்மீகம் என அனைத்து வட்டத்திலும் பரபரப்பு நிலவியது. தலைமறைவாக இருந்த நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். விசாரணை மற்றும் சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆன அவர் தற்போது வழக்கமான ஆன்மீக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். நித்தியுடன் இருந்ததாக கூறப்பட்ட நடிகை ரஞ்சிதாவை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. விரைவில் போலீஸ் முன் ஆஜராகி உண்மையை சொல்வேன் என்று வழக்கறிஞர் மூலம் தகவல் அனுப்பியதோடு காணாமல் போய் விட்டது ரஞ்சிதா விவகாரம்.
இந்நிலையில் ரஞ்சிதா – நித்தியானந்தா விவகாரத்தை சினிமாவாக எடுக்க திரையுலக பிரமுகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மும்பையை கலக்கும் நிஜ தாதா கதைகளை படமாக எடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் டைரக்டர் ராம்கோபால் வர்மா நித்தியின் லீலைகளை படமாக எடுக்கப் போகிறாராம். அந்த படத்திற்கு காட் அண்ட் செக்ஸ் என பெயர் சூட்டியிருக்கும் அவர், ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். இந்த படத்தில் முகம் தெரிந்த நித்தியானந்தா கேரக்டருக்கு முகம் தெரிந்த நடிகருக்கு பதில் புதுமுகங்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் ராம்கோபால் வர்மா. நாயகியாக அதாவது ரஞ்சிதா கேரக்டரில் பாலிவுட் பிரபல நடிகையை நடிக்க வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. விரைவில் ஆடிசன் நடத்தவிருக்கும் ராம்கோபால் இப்படத்தை இவ்வாண்டு இறுதியில் தொடங்க திட்டமிட்டிருக்கிறாராம்.
இதேபோல தெலுங்கு திரையுலகமும் நித்தியின் கதையை படமாக எடுத்து வருகிறது. அந்த படத்தில் நித்யானந்தா வேடத்தில் ராஜேந்திரபிரசாத் நடிக்கிறார். இவர் தெலுங்கு திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக உள்ளார். முக்கிய கேரக்டரில் சிவாஜி, சாய்குமார் நடிக்கின்றனர். நித்யானந்தா கதை இப்படத்தில் துணை கதைபோல் உருவாக்கப்பட்டு உள்ளதாம். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. அவ்விழாவுக்கு ராஜேந்திர பிரசாத் நித்யானந்தா கெட்டப்பில் வந்து அசத்தியிருக்கிறார். இப்படத்தில் நித்யானந்தாவின் முழு வாழ்க்கையும் படமாக்கப்படுகிறதா? அல்லது ரஞ்சிதா சம்பந்தப்பட்ட பகுதி மட்டும் படமாக்கப்படுகிறதா? என்று படக்குழுவினரிடம் கேட்டால், அது சஸ்பென்ஸ் என்ற பதிலே வருகிறது.
Mate thanks for this article. I absolutely agree with it
Good stuff mate. Have a look at my website. You may like it