Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விவாகரத்துக்கு பிறகுதான் மகிழ்ச்சி

         எனது கணவரை விவாகரத்து செய்த பிறகுதான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நடிகை மீரா வாசுதேவன் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். உன்னை சரணடைந்தேன், ஜெர்சி, கத்திகப்பல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா வாசுதேவன்.
      இப்போது ஆட்டநாயகன் என்ற படத்தில் நடித்து வரும் மீரா, விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
        இந்நி‌லையில் மீராவுக்கு புது காதலன் கிடைத்திருக்கிறார். ஜான் கோக்கன் என்ற அந்த காதலனை விரைவில் திருமணம் செய்யப்போவதாக கூறும் மீரா, எனது வாழ்க்கையில் எல்லாமே சிறு வயதிலேயே நடந்து விட்டன. விளம்பர படங்களில் நடித்தது, சினிமாவுக்கு வந்து விருதுகள் வாங்கியது என எல்லாமே நடந்து விட்டது. திருமணமும் அப்படித்தான் சீக்கிரம் நடந்து விட்டது.
     நான் அதற்கு தயாராகாத நேரத்தில் முடிந்து விட்டது.  எங்களுக்குள் சுமூகமான உறவு நீடிக்கவில்லை. எனவே பிரிந்து விட்டோம். பழைய வாழ்வை முழுமையாக மறந்து விட்டேன். இப்போதுதான் சரியான வழிக்கு வந்துள்ளேன்.
   விவாகரத்துக்கு பிறகுதான் என் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறியுள்ளது. ஜான்கோக்கன் புதிதாக என் வாழ்க்கையில் வந்துள்ளார். அவர் ஒவ்வொரு விஷயத்திலும் என்னை ஊக்கப்படுத்துகிறார். ஆறுதலாகவும் இருக்கிறார்.
    அவர் என்னை காதலிக்கிறார். எனக்கு பொருத்தமானவர் அவர்தான், என்று கூறியிருக்கிறார். மீராவின் காதலர் ஜான் கோக்கன் கேரளாவை சேர்ந்தவர். மலையாளம் மற்றும் கன்னட படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: