பாஸ் என்கிற பாஸ்கரன் படம் வெற்றிகரமாக ஓடுவதில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அப்பட நாயகரும், அப்படத்தை தனது ஷோ பீப்பிள்ஸ் பட நிறுவனம் மூலமாக வாங்கி, உதயநிதி ஸ்டாலின் மூலம் வெளியிட்டிருப்பவருமான நடிகர் ஆர்யா! அந்த மகிழ்ச்சினூடே திருமணத்தைப் பற்றி கேட்டோம். அதற்கு, பொண்ணு தேடிக்கிட்டு இருக்காங்க… ஆனால் எனக்கு என்னவோ என் கேரக்டருக்கு லவ் மேரேஜ்தான் செட் ஆகும்னு தோணுது. ஆனா இதுவரை யாரையும் லவ் பண்ணலை. ஆன் தி வே… யாரையாவது பார்த்து பிடிச்சு போன அடுத்த நிமிஷம் கல்யாணம்தான் என்று சிரித்தவருக்கு, நான் கடவுள் தாடி மீசை மாதிரி மீண்டும் ஒருமுறை வளர்த்து கொண்டு நடிக்க வேண்டும் என்பது ஆசையாம். அட!