மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் புற்று நோயாளிகளுக்கும் அவர்களுடன் செல்லும் துணைக்கு செல்வோருக்கும் கட்டண சலுகை வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதை செயல்படுத்தும் வகையில் ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகவும் பரிசோதனைக்காகவும் செல்லும் புற்று நோயாளிகள் ரயிலில் 2-ம் வகுப்பிலும், 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியிலும் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களுடன் துணைக்கு வருவோருக்கு 75 விழுக்காடு கட்டண சலுகை வழங்கப்படும்.
மேலும் ஏ.சி முதல் மற்றும் 2-ம் வகுப்பு பெட்டிகளில் புற்றுநோயாளிகள் 75 விழுக்காடு கட்டண சலுகையிலும் துணைக்கு வருவோர் 50 விழுக்காடு கட்டண சலுகையிலும் பயணம் செய்யலாம். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.