ஃபார்முலா ஒன் சாம்பியன் லீவிஸ் ஹாமில்டன் சமீபத்தில் சென்னை வந்த போது, விக்ரமை பந்தய கார் சவாரிக்கு அழைத்தார். கார் பந்தயத்தில் கலக்கி, ரசிகர்கள் பலரின் மனதை கொள்ளை கொண்டுள்ள லீவிஸாக வாழ்க்கையில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது விக்ரமின் நீண்ட நாள் ஆசையாம். அந்த அளவிற்கு விக்ரமின் மனம் கவர்ந்த லீவிஸ் அழைத்த உடனேயே சென்றுள்ளார் விக்ரம். கார் பந்தய சவாரி முடித்து திரும்பிய விக்ரம், மிக அற்புதமாக இருந்ததாக தனது பந்தய கார் சவாரி அனுபவத்தை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.