உதயநிதி ஸ்டாலின் தனது ரெட்ஜெயண்ட் மூவிஸ் பிரமாண்டமான, பெரிய பட்ஜெட் படங்களை மட்டுமே வாங்கி வெளியிட்டு லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாத நிறுவனம் என்பதை நிரூபிக்கும் விதமாக சமீபமாக வாங்கி வெளியிட இருக்கும் படம் மைனா. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க, பிரபுசாலமன் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட் கல்பாத்தி எஸ்.அகோரத்துடன், ஷாலோம் ஸ்டூடியோஸ் தயாரித்திருக்கிறது. சுருளி, மைனா என இரண்டு கேரக்டர்கள். இவர்களது சிறுவயது நட்பும், வளர்ந்த பருவத்தின் காதலும், அதனால் எதிர்கொள்ளும் பிரச்னைகளும்தான் மைனாவின் மொத்த கதையும்.
மைனாவில் இயற்கை வெளிச்சத்தை வைத்து ஒரு ஓவியமே வரைந்திருக்கிறாராம் ஒளிப்பதிவாளர் சுகுமார். டி.இமானின் இசையும் கூட இதில் இயல்பாகவே வந்திருக்கறிதாம். நல்ல இசையும், வெளிச்சமும்தான் சரியான சினிமா என்பதை மைனா திரைப்படத்தை 2.15 மணி நேரம் பார்த்துவிட்டு வருபவர்கள் உணருவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் பிரபுசாலமன்.