புடவைகடை, நகைக்கடை விளம்பரங்களில் நடித்து வந்த சினேகாவுக்கு பிரமோஷன் கிடைத்திருக்கிறது. புதிதாக வரப்போகும் ஹாலிக்ஸ் விளம்பரத்தில் சினேகாதான் இந்தியர்களை ஹர்லிக்ஸ் குடிக்கச் சொல்லி அறிவுறுத்தப் போகிறார். உள்ளூர் விளம்பரங்களில் மட்டும்தான் இதுவரை சினேகா அசத்திக் கொண்டிருந்தார். முதல்முறையாக சினேகாவின் ஹேமிலி லுக் இந்திய அளவில் அவரை கொண்டு போய் சேர்க்க இருக்கிறது. ஆமாம், ஹர்லிக்ஸ் விளம்பரத்தைதான் சொல்கிறோம். இந்த விளம்பரத்தில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார் சினேகா.