Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

களவாணி விமல் – புதிய படம் எத்தன்

கிராமிய கதை‌க்களத்தை மையமாக கொண்டு உருவான களவாணி படத்தின் விஸ்வரூப வெற்றியைத் தொடர்ந்து ஷேரலி பிலிம்ஸ் நசீர் அடுத்து தயாரிக்கவிருக்கும் புதிய படம் எத்தன். களவாணியில் நாயகனாக நடித்த நடிகர் விமல்தான் எத்தன் படத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சனுஷா நடிக்கிறார். இவர்கள் தவிர சிங்கம்புலி, மயில்சாமி, ஜெயப்பிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், பிரகதி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். தாஜ்நூர் இசையமைக்க, பாடல்களை நா.முத்துக்குமார், கபிலன் எழுதுகிறார்கள். எத்தன் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ். இந்த படமும் நடிகர் விமலின் நடிப்புக்கு தீனி போடும் என்கிறார் டைரக்டர் சுரேஷ்.

Leave a Reply