பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டான்டன் பிராணிகள் நல அமைப்பான பீட்டா நிறுவனத்தின் விளம்பரத்தில் தோன்றுகிறார். இந்த விளம்ரத்தில் ரவீனா ரத்த வெள்ளத்தில் கிடந்தபடி பாம்புத்தோல் போல் பளபளக்கும் ஒரு அழகான ஆடையில் தோன்றுகிறார். அதன் கீழே, அழகான தோல் ஆடைகள் அணிவதன் காரணமாக பிராணிகள் கொல்லப்படுகின்றன. உங்கள் வார்ட்ரோபில் பிராணிகள் இருக்க வேண்டாம், என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த விளம்பரத்தை புகழ்மிகக புகைப்பட நிபுணர் அவினாஷ் கொவாரிகெர் எடுத்துள்ளார்.
பூட்ஸ்கள், பைகள் மற்றும் இதர தயாரிப்புகளை செய்ய, பாம்புகள், முதலைகள் மற்றும் இதர பிராணிகளிடம் இருந்து தோல் உரிக்கப்படும் முன்பு அவை எப்படியெல்லாம் அவதிப்படுகின்றன என்பதை இந்த பொருட்களை வாங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பீட்டா விரும்புகிறது. இந்த விளம்பரத்தில் தோன்றுவதன் மூலம் ரவீனா டான்டன், ஜான் ஆபிரகாம், பமேலா ஆன்டர்சன், சர் பால் மிக்கார்ட்னி மற்றும் ஜாக்கிசான் போன்ற நட்சத்திரங்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.