Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிந்து சமவெளி

ராணுவத்தில் பணிபுரியும் கஜனி மகன் ஹரிஸ் கல்யாண். பிளஸ்-2 மாணவர். சக மாணவி அனகாவை விரும்புகிறார். எல்லையில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் கஜினி காயம்படுகிறார். விருப்ப ஓய்வு பெற்று கிராமத்துக்கு திரும்புகிறார். அப்போது மனைவி விபத்தில் சாகிறாள். தன்னையும் மகனையும் கவனித்துக் கொள்ள பெண் வேண்டும் என கருதி மகன் காதலிக்கும் அனகாவையே திருமணம் செய்து வைக்கிறார். திருமணத்துக்கு பின் ஹரிஸ் கல்யாண் ஆசிரியர் பயிற்சிக்காக வெளியூரில் தங்கி படிக்க செல்கிறார். சந்தர்ப்ப சூழ்நிலை கஜினி, அனகாவை உடல்ரீதியாக இணைய வைக்கிறது. இருவரும் கணவன்-மனைவியாக தங்களை ஆக்கிக் கொண்டு வாழ்கிறார்கள். படிப்பு முடிந்து திரும்பும் ஹரிஸை தன்னை நெருங்க விடாமல் தவிர்க்கிறார். இருவருக்கும் உள்ள கள்ள உறவு ஹரிசுக்கு தெரிய நொறுங்குகிறார். மூவரின் நிலைமை என்னவாகிறது என்பது விறுவிறுப்பான கிளைமாக்ஸ்.
கதையில் விரசம் இருந்தாலும் ஹரிஸ் கல்யாண், அனகா, கஜினி மூவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து உயிர் கொடுக்கிறார்கள். தாய் பாசத்திலும், காதலிலும் நேர்த்தியாக வருகிறார் ஹரிஸ். தந்தை, மனைவி நெருக்கத்தை கண்டு முகம் சுழிப்பதிலும், இருவரும் தப்பானவர்களா இல்லையா என இனம்காண முடியாமல் தடுமாறுவதிலும் “ஸ்கோர்” பண்ணுகிறார். கிளைமாக்ஸ்சில் தந்தையை கடலுக்கு அழைத்து போய் ஜலசமாதி ஆக்குவதில் உஷ்ணம் காட்டுகிறார். அனகாவிடம் தேர்ந்த நடிப்பு. மாணவியாக துறுதுறு என வரும் அவர் மாமனாருடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு கிறங்கடிக்கிறார். கடலில் விழுந்த தன்னை மாமனார் காப்பாற்றி படகில் ஏற்றியதும் அலங்கோலமாக உள்ள ஆடையை அவசர மாக சரி செய்யும் அவர் அலையில் தடுமாறும் மாமனார் மீது விழுந்து அவரது பலாத்காரத்துக்கு உடன்பட்டு அனல் மூட்டுகிறார். தப்பு செய்த வருத்தத்தில் புலம்பி கிடக்கும் மாமனாரை காமவெறியில் ஒவ்வொரு கதவாய் தாழிட்டு அவரது படுக்கையறைக்கு வலியபோய் நெஞ்சில் கைவைக்கையில் தேகமெங்கும் காம கொள்ளி வைக்கிறார். ஒரு கட்டத்தில் தவறை உணர்ந்து ரெயிலில் விழுந்து சாவது பரிதாபம். ராணுவ வீரராக மிடுக்கு காட்டுகிறார் கஜினி. குழி தோண்டும்போது தவறி தன் மேல் விழும் மருமகள் மேல் காமஇச்சை எழுவதும் அதிலிருந்து விடுபட நினைத்து முடியால் தவிப்பதும் நேர்த்தி. மருமகளை விதவிதமாய் ஆடைகள் அணிய வைத்து அழகு பார்ப்பது, அவருக்கு பிடிக்காத குடிப்பழக்கத்தை நிறுத்துவது என கள்ள உறவுக்கு வலு சேர்க்கிறார்.
கிளைமாக்சில் மகனிடம் பதினெட்டு வருசம் நான் ராணுவத்தில் இருந்தபோது உங்கம்மா நேர்மையாவா இருந்திருப்பா என்று தனது தவறுக்கு நியாயம் பேசும் வசனம் பொருத்தமாய் இல்லை.

3 Comments

  • chepauktriplicane

    மனதை புரட்டிப்போடும் காமரச கதை… படம் பார்ப் போரை நல்வழி படுத்துமா? கேடு செய்யுமா? என்பதை பட்டிமன்றத்துக்குதான் விடவேண்டும்.
    மாமனார், மருமகள் தகாத உறவை சித்தரிக்கும் கதை.

  • neso

    மாமனார், மருமகள் தகாத உறவை சித்தரிக்கும் அசிங்கமான கதை.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: