Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழ்நாடு மின்சார வாரியம் : ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதி!!!

சென்னை: ஆன்-லைன் மூலம் மின் கட்டணத்தை செலுத்தும் சென்னை, கோவை மண்டலங்களை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் (அக்டோபர்) தமிழ்கம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மின்சார வாரிய தலைவர் சந்திரபிரகாஷ்சிங் கூறினார்.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் சந்திர பிரகாஷ்சிங் கூறியது: ஆன்லைனில் மின்கட்டணத்தை செலுத்தும் வசதி தமிழ் நாட்டில் முதலில் சென்னை மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட்து. தற்போது சென்னை மண்டலத்தில் சராசரியாக 62 ஆயிரம் பேர் மின் கட்டணத்தை ஆன்லைன்மூலம் செலுத்தி வருகிறார்கள். ஆனால். மொத்த மின் நுகர்வோர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு தான். ஆன்லைன் மிகவும் குறைவு தான். ஆன்லைன் வசதி குறித்து இப்போதுதான் கொஞ்சமாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. மின் கட்டணத்தை செலுத்த மின்சார வாரிய அலுவலகத்திற்குசென்று வாரிய அலுவலகத்திற்கு சென்று வரிசையில் கால்கடுக்க நிற்க தேவையில்லை. ஆன்லைன் வசதி இருந்தால் ஒரு நொடியில் கட்டணத்தை செலுத்தி விடலாம். சென்னையை தொடர்ந்து தற்போது கோவை மண்டலத்தில் இந்த வசதியை அறிமுகப்படுத்து உள்ளோம். அதற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
தமிழக மின்சார வாரியத்தை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, வேலூர் விழுப்புரம், திருச்சி என்று 8 மணடலங்களாக பிரித்திருக்கிறோம். சென்னை, கோவை மண்டலங்களை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மண்டலங்களுக்கும் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன் மூலம் மின் நுகர்வோர்கள் அனைவரும் மின்கட்டணத்தை ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். பாரத் ஸ்டேட் வங்கி உள்பட இதர வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் வசதியை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சந்திர பிரகாஷ் சிங் தெரிவித்தார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: