நமது கால்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளாக மாறி வரும் சூழலுக்கு ஏற்பட பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான வகையில் அமைந்துள்ளது. தற்போது பலரும் வெறும் காலால் மண்ணை மிதிப்பதே இயலாத விஷயமாக உள்ளது. பிறந்த குழந்தை முதல் அனைவரும் எப்போதும் செருப்பு அணிந்து கொண்டுதான் நடக்கிறோம். பல வீடுகளில் வீட்டிற்குள் போடுவதற்கு என்று தனியாக செருப்புகள் இருக்கும். ஆனால் நமது கால்கள்தான் இயற்கையான செருப்பு. உண்மையில் வெறும் காலுடன் நடப்பது, பயிற்சியில் ஈடுபடுவது என்பது பல நல்ல விஷயங்களுக்கு உதவும். கடுமையான உடற்பயிற்சிகள் செய்வோர், இயற்கை சூழல் மிகுந்த இடங்களில் செல்வோர் காலில் செருப்பணியாமல் நடப்பது நல்லது என்கிறது விஞ்ஞானம். நமது ஊரில் செருப்பில்லாமல் நடப்பது என்பது இயலாத காரியம் என்றாலும், அதற்கான வாய்ப்பு உள்ள இடங்களில் வெறும் காலுடன் நடப்பதை வழக்கமாக்கிக் கொள்வோம்.
thanks webdunia