படிப்பு ஏறாமல் வெட்டியாக திரிபவர் ஆர்யா. அவர் அண்ணன் சுப்பு பஞ்சு, கால்நடை டாக்டர். ஒரு தங்கை. வீட்டில் அம்மாவை தவிர எல்லோரும் ஒன்றுக் கும் உதவாதவன் என அர்ச்சிக் கின்றனர். சலூன் கடை நடத்தும் நண்பன் சந்தானத்துடன் குடி கொண்டாட்டம் என சுற்றுகிறார். ஒரு கட்டத்தில் அரியர் தேர்வு எழுத போய் பரீட்சை ஹாலுக்கு வரும் ஆசிரியை நயன்தாராவை பார்த்து காதல் வயப்படுகிறார். ஏதேச்சையாக நயன்தாரா அக்காவே அண்ணன் மனைவியாக காதலை தீவிர மாக்குகிறார்.
அண்ணியிடம் தங்கையை தனக்கு கட்டி வைக்குமாறு கேட்கிறார். வேலை இல்லாதவருக்கு பெண் தர முடியாது என அவர் மறுக்கிறார். நயன்தாரா பெற்றோரும் ஒதுக்குகின்றனர். இதனால் ரோஷமாகி பணத்தோடு வருகிறேன் என சவால் விட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறார். பாஸ் ஆகா விட்டால் பணம் வாபஸ் என்ற உத்தர வாதத்தோடு டூட்டோரியல் ஆரம்பிக்கிறார். அங்கு சேரும் மாணவர்கள் படிக்காமல் ரவுடித்தனம் செய்கின்றனர். தொழில் நசுங்கும் சூழலில் இடிந்து போய் உட்காருகிறார். அதன் பிறகு அவர் எடுத்த முயற்சி என்ன? பணம்சம் பாதித்து நயன்தாராவை கை பிடித்தாரா? என்பது கிளை மாக்ஸ்…
காதலும் காமெடியுமாய் கதையை கலகலப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் ராஜேஷ். கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஆர்யா. நகைச்சுவையிலும் பாஸ் ஆகி இருக்கிறார். சந்தா னத்துடன் இணைந்து அவர் செய்யும் லொள்ளுபடம் முழுக்க நீண்டு வயிற்றை பதம் பார்க்கிறது.